search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி"

    கூடுதல் மிகை நேர பணிக்கு ஊதியம் வழங்ககோரி தூய்மை பணியாளர்கள் இன்று காலை நாமக்கல் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 76 பேர் பணிபுரிகின்றனர்.

    இந்த நிலையில் கூடுதல் மிகை நேர பணிக்கு ஊதியம் வழங்ககோரி தூய்மை பணியாளர்கள் இன்று காலை நாமக்கல் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மிகை ஊதியம், குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும் என அவர்கள் பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த திடீர் போராட்டத்தால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது.

    தூய்மை பணியாளர்களிடம் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்செல்வி கூறியதாவது:-

    மிகை நேரப்பணி காலத்தை கணக்கிட்டு தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4000 தருவதாக ஒப்பந்தம் போட்டப்பட்டது. இரு தவணையாக தருவதாக கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். நவம்பர் மாதத்திலும், டிசம்பர் மாதத்திலும் தருவதாக கூறினார்கள். இதுவரையிலும் இந்த பணம் தராததால் ஒப்பந்த பணியாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×